பாக்கியலட்சுமி சீரியலில் ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மாற்றம்! ரசிகர்கள் ஷாக்
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தற்போது சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்த சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கணவரை விவாகரத்து செய்த பாக்யா எப்படி சுயமாக உழைத்து மொத்த குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறார் என இந்த தொடரில் காட்டப்பட்டு வருகிறது.
தற்போது பாக்யா கேட்டரிங் வேலை, கேன்டீன் நடத்துவது மட்டுமின்றி கல்லூரிக்கும் சென்று வருகிறார்.
இரண்டு நடிகைகள் மாற்றம்
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தற்போது ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மாற்றப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அக்ஷயா அந்த ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
மேலும் செழியனின் புது லவ் ட்ராக்கில் நடித்து வந்த நடிகை தீப்தி விலகிய நிலையில் அவருக்கு பதில் தற்போது ரேமா அசோக் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இப்படி ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மாற்றப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
Also Read: 10 நிமிடத்தில் பாடி வருது, குடும்பத்தோடு அழுதோம்- சோகமான விஷயத்தை கூறிய ரோபோ ஷங்கர்