அஜித்துக்கு கதை சொன்ன இரண்டு முக்கிய இயக்குனர்கள்.. யார் பாருங்க
நடிகர் அஜித் ஏற்கனவே நடித்து முடித்து இருக்கும் குட் பேட் அக்லீ படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்காக அஜித் ரசிகர்கள் எல்லோரும் தற்போது காத்திருக்கிறார்கள்.
மேலும் அஜித் அடுத்த பல மாதங்களுக்கு கார் ரேஸ் மீது கவனம் செலுத்த இருப்பதால் அடுத்த படத்தை இன்னம் உறுதி செய்யாமல் இருக்கிறார்.
கதை சொன்ன முக்கிய இயக்குனர்கள்
அஜித் அடுத்த படம் யாருடன் என்பது இன்னும் உறுதி ஆகாத நிலையில் இரண்டு முக்கிய இயக்குனர்கள் அவருக்கு கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மகாராஜா பட புகழ் இயக்குனர் நித்திலன் ஒரு கதை கூறி இருக்கிறாராம். அதே போல போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவும் ஒரு கதை சொல்லி இருக்கிறார்.
இப்படி பல முக்கிய இயக்குனர்கள் அஜித்துக்கு கதை கூறி இருக்கும் நிலையில், அவர் யாருடன் கூட்டணி சேர போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.