வடிவேலு - சுந்தர் சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்.. யார்யார் தெரியுமா
கேங்கர்ஸ்
அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு 3 எடுக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், அப்படத்திற்கு பதிலாக வடிவேலுவுடன் இணைந்து புதிய படத்தில் இறங்கினார்.

பல ஆண்டுகளுக்கு பின் வடிவேலு - சுந்தர் சி காம்போவில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ஒரு படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை சமீபத்தில் தான் வெளியிட்டனர். மேலும் இப்படத்திற்கு கேங்கர்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கதாநாயகிகள்
மேலும் இப்படத்தில் பிரபல நடிகை கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதை படத்தின் போஸ்டரிலேயே தெரிவித்து விட்டனர். ஆனால், கேத்ரின் தெரசா மட்டுமின்றி மற்றொரு கதாநாயகியும் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.

அவர் வேறு யாருமில்லை நடிகை வாணி போஜன் தான். ஆம், வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கும் வாணி போஜன் சுந்தர் சி - வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை முடித்தபின் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    