விரைவில் சன் தொலைக்காட்சியில் 2 சீரியல்களின் மகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
சன் டிவி
சன் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே சீரியல்கள் நியாபகம் வந்துவிடும்.
பல வருடங்களாக ஏகப்பட்ட தொடர்களை ஒளிபரப்பி கெத்து காட்டி வருகிறார்கள். இப்போது மூன்று முடிச்சு, கயல், அன்னம், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்களின் கதைக்களம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மகா சங்கமம்
எல்லா தொடர்களின் கதையும் விறுவிறுப்பாக செல்ல இப்போது சன் டிவி தொடர் குறித்த ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது. அது வேறொன்றும் இல்லை, இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் தான்.
கடைசியாக சன் டிவியில் செல்லமே செல்லமே மற்றும் அன்னம் தொடர்களின் மகா சங்கமம் நடந்தது. அதில் நிலா ஒரு குழியில் விழுந்ததும் அவரைக் காப்பாற்ற நடந்த போராட்டம் தான் இந்த மகா சங்கமத்தில் பரபரப்பாக காட்டப்பட்டது.

அந்த எபிசோடின் டிஆர்பியும் அதிகமாக வந்தது. இந்த நிலையில் வேறு 2 தொடர்களின் மகா சங்கமம் குறித்த தகவல் வந்துள்ளது.

வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கும் லட்சுமி மற்றும் இரு மலர்கள் தொடர்களின் மகா சங்கமம் வரும் ஜுலை 1 முதல் ஆரம்பமாக உள்ளதாம். பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu