2 முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்த கதையில் நடித்த விஜய்.. வாரிசு படம் வெற்றிபெறுமா
வாரிசு
விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, ஷாம், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது தளபதி விஜய் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நிராகரித்த கதை
இயக்குனர் வம்சி முதன் முதலில் இப்படத்தின் கதையை மகேஷ் பாபுவிடம் தான் கூறினாராம். ஆனால், மகேஷ் பாபு இந்த கதையை வேண்டாம் என்று கூற, அதன்படி ராம் சரணிடம் கதையை கூறியுள்ளார் வம்சி.
ஆனால், ராம் சரணுக்கும் படத்தின் கதை பிடிக்காமல் போக, வேண்டாம் என கூறிவிட்டாராம். இதன்பின் தான் தளபதி விஜய் வாரிசு படத்தின் கதையை கூறி கமிட் செய்துள்ளார் இயக்குனர் வம்சி.
இப்படி இரு முன்னணி நட்சத்திரங்கள் வேண்டாம் என்று கூறிய கதை நாளை வெளியாகவுள்ள நிலையில், படம் வெற்றிபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அம்பானியின் பல கோடி ஆஃபரை தூக்கி எறிந்த ரஜினிகாந்த்.. காரணம் என்ன தெரியுமா

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
