உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தில் இத்தனை நட்சத்திரங்களா! சூப்பர் அப்டேட்..
உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2020-ல் வெளியான சைக்கோ திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உருவாகி வந்தது, இப்படம் ஹிந்தியில் ஹிட்டான Article 15 படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது.
அதன்படி உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். அப்படத்தில் அவருடன் பாஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri