கூலி படம் எப்படி இருக்கு? படம் பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி சொன்ன விமர்சனம்
கூலி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாளை இப்படம் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு, தனது விமர்சனத்தையும் வாழ்த்துக்களையும் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கூலி விமர்ச்னம்
இந்த பதிவில், "கலையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த வரலாறு தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்".
"நாளை வெளியாகும் அவருடைய கூலி திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்து. அனைத்து தரப்பையும் ஈர்க்கிற மாஸ் Entertainer படமாக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது" என தனது விமர்சனத்தை அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் அந்த பதிவில் அவர் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் @rajinikanth சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
— Udhay (@Udhaystalin) August 13, 2025
நாளை வெளியாகும் அவருடைய ‘#கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும்… pic.twitter.com/c5LXRa6IXr