'விஜய்யிடம் வாழ்த்து பெற்று தான் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன்' - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து வருகிற 18ஆம் தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ப்ரோமொஷன் பேட்டியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் உதயநிதியிடம், நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அரசியல் பிரச்சாரம்
இதற்க்கு குருவி படத்திலிருந்து விஜயுடனான உறவை பற்றி பேசி வந்த உதயநிதி ' தேர்தல் பிரச்சாரத்திற்கு முன், விஜய் என்னை அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களை பெற்ற பின் தான், பிரச்சாரத்திற்கு சென்றேன் ' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan