விஜய் குறித்த கேள்விக்கு ஒரு வரியில் முடித்த உதயநிதி ஸ்டாலின்... என்ன சொன்னார் தெரியுமா?
விஜய்
டிசம்பர் 6, அன்று சென்னையில் ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மிகப்பெரிய அளவில் நடந்தது. அதில் கலந்துகொண்ட விஜய் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் வர முடியாமல் போய்விட்டது.
அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது என கூறியிருந்தார்.
உதயநிதி
விஜய்யின் பேச்சு குறித்து துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை என கூறியுள்ளார். திருமாவளவனும், விஜய் கட்சிகள் அழுத்தம் என்று கூறியிருக்கிறார், அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன், அந்த அளவிற்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்றிருக்கிறார்.