மாரி செல்வராஜிற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த Mini Cooper காரின் விலை இத்தனை லட்சமா?
மாமன்னன்
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் ஹிட் படமாக அமைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.
கடந்த ஜுன் 29ம் தேதியும் இப்படம் பக்ரீத் பண்டிகை அன்று வெளியாகி இருந்தது. ரிலீஸ் பிறகு படத்திற்கான விமர்சனம் எல்லாமே சூப்பராக தான் வந்தது, வசூலும் எந்த குறையும் இல்லாமல் வருகிறது.
5 நாள் முடிவில் படம் ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
காரின் விலை
தனது கடைசி படமான மாமன்னன் படு ஹிட்டடிக்க சந்தோஷத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு Mini Cooper கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
பரிசு பெரும் போது எடுக்கப்பட்ட உதயநிதி-மாரி செல்வராஜ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.
உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜிற்கு கொடுத்த காரின் விலை ரூ. 57 லட்சம் மதிப்புள்ளது என்கின்றனர்.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் என்று தெரிகிறதா?- அவர் இவர்தானா?