நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு... எத்தனை கோடி தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் ரெட் ஜெயண்ட் மூலீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுகமானவர் தான் உதயநிதி ஸ்டாலின்.
கடந்த 2008ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் மன்மதன் அம்பு, ஆதவன், ஏழாம் அறிவு என தொடர்ச்சியாக டாப் நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார்.

தயாரிப்பில் இருந்த போது அவருக்கு நடிக்கும் ஆசை வர கடந்த 2012ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
பின் தொடர்ந்து மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, நெஞ்சுக்கு நீதி, சைக்கோ, மாமன்னன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். அதோடு அவர் சினிமாவில் இருந்தும் விலகினார்.
சொத்து மதிப்பு
சினிமாவை தாண்டி அரசியலில் களமிறங்கியவர் படிப்படியாக முன்னேறி இப்போது துணை முதல்வராக வலம் வருகிறார். சினிமாவை போல அரசியலிலும் குறுகிய காலகட்டத்தில் உச்சத்திற்கு சென்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

இன்று உதயநிதி ஸ்டாலின் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அனைவருமே வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவரின் சொத்து மதிப்பு ரூ. 33 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.