உதயநிதியும் டிராபிக் போலீசிடம் மாட்டி இருக்கிறாரா.. பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்
செல்போன் பேசிகொண்டே கார் ஓட்டியதற்காக டிடிஎப் வாசன் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அதே போல நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டி சென்ற நிலையில் போலீசிடம் சிக்கி அவர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
உதயநிதி
பிரபல நடிகராக இருந்து தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும் இதற்கு முன் ட்ராபிக் போலீசிடம் ஒருமுறை சிக்கி இருக்கிறாராம். கல்லூரி படிக்கும் காலத்தில் விஷால், உதயநிதி ஆகியோர் பைக்கில் ட்ரிப்பிள்ஸ் சென்றதற்காக மாட்டி இருக்கிறார்கள்.
தாத்தா சிஎம், அப்பா துணை முதலமைச்சர் என போய் சொல்லு என விஷால் கூறினாராம். ஆனால் அதெல்லாம் முடியாது என உதயநிதி கூறிவிட்டாராம்.
போலீஸ் பைன் போட்ட நிலையில் அதை கட்டிவிடுவதாகவும், கைது எல்லாம் பண்ணிடாதீங்க என உதயநிதி கூறினாராம்.
முதலமைச்சரின் பேரன் என அதன் பின் தான் அந்த போலீசுக்கு தெரிந்ததாம். இந்த விஷயத்தை உதயநிதி தான் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
