நடிப்பதை நிறுத்தும் உதயநிதி ஸ்டாலின்! அனேகமாக இதுதான் கடைசி படம்
நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதனால் விரைவில் சினிமாவில் இருந்து விலகபோவதாக பேட்டி அளித்து இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து இருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பற்று இருக்கிறது. அதன் ட்ரைலர் விளையாட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் 'உதயநிதி தான் தமிழ் சினிமாவில் உண்மையான டான்' என தெரிவித்து இருந்தார்.
நெஞ்சுக்கு நீதி படம் வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது.
இதுதான் கடைசி படம்
இந்நிலையில் உதயநிதி சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் தான் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் அநேகமாக கடைசி படமாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.
சினிமாவை விட அரசியல் ஆர்வம் அதிகம் என்பதால் தான் இந்த முடிவு எடுத்திருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
