7ம் அறிவு படத்தில் அந்த வசனம் வெச்சிருக்க கூடாது.. சூர்யா அப்போவே சொன்னார்: உதயநிதி ஸ்டாலின்
7ம் அறிவு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2011ல் வந்த படம் ஏழாம் அறிவு. அந்த படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
அந்த படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி கூறி இருக்கிறார்.
இடஒதுக்கீடு
"7ம் அறிவு படத்தில் இடஒதுக்கீடு பற்றிய காட்சி ஒன்று இருக்கும். ஸ்ருதி ஹாசன் அந்த வசனத்தை பேசி.இருப்பார். முழு படத்தையும் பார்த்த சூர்யா அந்த வசனத்தை நீக்கும்படி என்னிடம் கூறினார். ஒரு வசனம் தானே இருக்கட்டும் என நான் கூறிவிட்டேன். அப்போது எனக்கு இருந்த அரசியல் புரிதல் அவ்வளவுதான்."
"ஆனால் தற்போது அதை அனுமதித்து இருக்கக்கூடாது என தற்போது உணர்கிறேன். முருகதாஸ் செய்ததும் தவறு என சொல்ல முடியாது, அது அவரது அரசியல் புரிதல்" என உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
மாளவிகா மோகனன் உடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்? போட்டோ படுவைரல்