'ஹிந்தி தெரியாது' என சொல்லிட்டு ஆமீர் கான் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்: உதயநிதி பதில்

By Parthiban.A Aug 07, 2022 05:11 PM GMT
Report

உதயநிதி ஸ்டாலின் தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலமாக பல தமிழ் படங்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகிறார்.

தற்போது முதல்முறையாக அவர் ஹிந்தி படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறார். அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தை தான் ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்கிறது.

இந்த படத்தின் விழாவில் பேசிய உதயநிதி, 'முதலில் ஹிந்தி படத்தையாவது விட்டு வைக்கலாம் என்று தான் டீமிடம் சொன்னேன். ஆனால் அமீர் கான் வீடியோ காலில் என்னிடம் பேசினார். அதன் பிறகு படம் பார்க்காமலேயே ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டேன் என தெரிவித்து இருக்கிறார்.

ஹிந்தி தெரியாது போடா என சொல்லிவிட்டு.. இப்போ

அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் உதயநிதியிடம் சில கேள்விகள் கேட்டார்கள். 'ஹிந்தி தெரியாது போடா என டிசர்ட் அணிந்த நீங்கள் எப்படி ஹிந்தி படம் ரிலீஸ் செய்கிறீர்கள்' என ஒருவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த உதயநிதி, 'ஹிந்தி கற்றுக்கொள்ள கூடாது என சொல்லவில்லை, கண்டிப்பாக கற்க வேண்டும் என திணிப்பதை தான் எதிர்க்கிறோம். நான் அமீர் கானின் ரசிகன்" என உதயநிதி பதில் அளித்து இருக்கிறார். 

நடிகர் வடிவேலுவின் மகளை பார்த்துள்ளீர்களா.. அவர் திருமணத்தில் எடுத்த புகைப்படம் 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US