UKவில் நாங்க வேறமாரி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நபர்- வைரலாக்கும் ரசிகர்கள்
தமிழ் ரசிகர்கள் 1 வருடத்திற்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லை என்றாலும் அஜித்தின் வலிமை படத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
ரசிகர்கள் அப்டேட் வேண்டும் என்று கேட்காத இடமே இல்லை, புலம்பாத நாட்களே இல்லை என்று தான் கூறவேண்டும். ஒரு வழியாக படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வரை வந்துவிட்டது.
அடுத்தக்கட்டமாக படத்தில் இருந்து டீஸர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் யுவன் இசையமைப்பில் நாங்க வேறமாரி என்ற பாடல் வெளியாக ரசிகர்கள் டாப் டிரண்ட் செய்து கொண்டாடினார்கள். இப்போது விஷயம் என்னவென்றால் நாங்க வேறமாரி பாடலுக்கு UKவில் இருக்கும் ஒருவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.
அந்த வீடியோவையும் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து யுவன் மேஜிக் இது என்று டிரண்ட் செய்து வருகின்றனர்.
Yuvan's magic ✨@ United Kingdom #Valimai #NaangaVeraMaari #ThalaDiwali @thisisysr @BoneyKapoor @SonyMusicSouth @VigneshShivN @ZeeStudios_ @HvinothDir pic.twitter.com/VLZocdp9tM
— arjith (@arjithravi) August 16, 2021