நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து விலகல்? அரசியலில் எண்ட்ரி? த்ரிஷாவின் அம்மா கூறிய தகவல்
த்ரிஷா சினிமாவிலிருந்து விலகல்?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து விலகப்போவதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது.
பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இந்த தகவல் கூறிய நிலையில், காட்டு தீ போல் ரசிகர்கள் மத்தியில் பரவியது. இந்த தகவல் த்ரிஷாவின் ரசிகர்ளுக்கு வருத்தத்தை கொடுத்த நிலையில், தற்போது இதுகுறித்து த்ரிஷாவின் தாய் வெளிப்படையாக பேசியுள்ளார்.
த்ரிஷாவின் அம்மா கூறிய தகவல்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன், த்ரிஷா சினிமாவிலிருந்து விலகி எங்கும் செல்லவில்லை, அவர் அரசியலுக்கும் செல்லவில்லை என அவர் உறுதியாக கூறியுள்ளாராம். இதன்மூலம் த்ரிஷா சினிமாவிலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கமே, ஐடென்டிட்டி எனும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார் த்ரிஷா. அடுத்ததாக விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து குட் பேட் அக்லி, விஸ்வம்பரா, சூர்யா 45 ஆகிய படங்கள் த்ரிஷா கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.