கோலாகலமாக நடந்த உமாபதி-ஐஸ்வர்யா திருமணம், புகைப்படங்கள் இதோ.... படு சந்தோஷத்தில் தம்பி ராமைய்யா, அர்ஜுன்
ஐஸ்வர்யா-உமாபதி
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் அர்ஜுன்.
இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் அறிமுகமாகி சில படங்களே நடித்தார். இதுவரை கன்னடத்தில் 1 படம், தமிழில் 2 திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்.
அதன்பிறகு அவர் படங்கள் நடிப்பது குறித்து எந்த தகவலும் இல்லை, இந்த நிலையில் தான் அவரது திருமண தகவல் வந்தது. ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்துள்ளது.
திருமணம்
பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்த நிலையில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று (ஜுன் 11) படு கோலாகலமாக நடந்துள்ளது.
அவர்களின் திருமண புகைப்படங்கள் சில இப்போது வெளியாகியும் உள்ளது.




