சர்வைவரால் ஆளே மாறிப்போன தம்பி ரமையா மகன்.. வைரல் போட்டோ
பிக் பாஸுக்கு போட்டியாக வரும் என ஆரம்பிக்கப்பட்ட ஷோ சர்வைவர். உலக அளவில் பாப்புலர் ஆன ஷோ என்றாலும் தமிழுக்கு இதுதான் முதல் முறை. ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த ஷோவை அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.
விக்ராந்த், விஜயலக்ஷுமி, ஸ்ருஷ்டி, உமாபதி ராமையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகை விஜயலக்ஷ்மி தான் இறுதியில் டைட்டில் ஜெயித்து ஒரு கோடி ரூபாய் பெற்றார். தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இறுதி வரை முக்கிய போட்டியாளராக இருந்தார். ஆனால் அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை.
சர்வைவர் சென்றதால் அவரது உடலில் பல பிரச்சனைகள் வந்திருப்பதாக அவர் தற்போது இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்டு உள்ளார். 80 கிலோ எடையில் இருந்து அவர் 66 கிலோவாக குறைந்திருக்கிறார். எது நடந்தாலும் தான் சிர்த்துக்கொண்டே இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.