நயன்தாரா இப்போது தான், 40 வருடங்களுக்கு முன்பே கே.ஆர்.விஜயா செய்த விஷயங்கள்...
நடிகைகள்
இப்போது உள்ள சினிமா நடிகைகள் நடிப்பதை தாண்டி சொந்த தொழில்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட், நகை, ஆடை தொழில்கள் செய்வது என தொடர்ந்து நடிகைகள் தொடங்கும் தொழில்கள் குறித்த தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. சில நடிகைகள் பிரைவெட் ஜெட் எல்லாம் வைத்துள்ளார்கள், நயன்தாரா நடிகைகளில் இப்போது வைத்துள்ளார்.

கே.ஆர்.விஜயா
இப்போது உள்ள நடிகைகள் பிரைவெட் ஜெட், பிரம்மாண்ட கார்கள் வைத்திருப்பதை ஆச்சரியமாக பார்க்கிறோம், ஆனால் 40 வருடங்களுக்கு முன்பே ஒரு நடிகை பிரைவெட் ஜெட், கப்பல் எல்லாம் வாங்கியுள்ளார், அவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகை கே.ஆர்.விஜயா தான்.

தமிழ் சினிமாவில் கே.ஆர்.விஜயாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது, 1960 மற்றும் 70களில் டாப் நடிகையாக வலம் வந்தார். அப்போது டாப்பில் இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல தொழிலதிபரை திருமணம் செய்த கே.ஆர்.விஜயாவிற்கு சொந்தமாக விமானம், 4 கப்பல்கள் என அவர் நடிக்கும் காலகட்டத்தில் வைத்திருந்தாராம்.

இந்திய சினிமாவிலேயே முதன்முதலாக பிரைவேட் ஜெட் மற்றும் கப்பல் வைத்திருந்த முதல் நடிகை என்ற பெருமையை கே.ஆர். விஜயாவிற்கு உள்ளது. தற்போது பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு பைக்கை, 70 களிலேயே ஒட்டி அசத்தியவரும் கே.ஆர். விஜயா தான்.