சினிமாவை தாண்டி மனோபாலாவிற்கு இருந்து வந்த பழக்கம்- வெளிப்படுத்திய பிரபலங்கள்
மனோபாலா
வெடவெடனான உடம்பை வைத்தே பல காமெடி காட்சிகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் இயக்குனரும், நடிகருமான மனோபாலா.
கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த மனோபாலா அவர்கள் நேற்று காலை தனது வீட்டிலேயே உயிரிழந்தார். செய்தி கேட்டவுடனே பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
மனோபாலா அவர்களின் கடைசியாக விஜய்யின் லியோ படம் அமைந்துவிட்டது, விஜய்யும் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சிறந்த குணம்
சினிமாவை தாண்டி மனோபாலா அவர்கள் சமையல் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராம். பிரபலங்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றாலே தனது கையாலேயே சமைத்து போடுவாராம். அதிலும் அவர் செய்யும் இட்லியும், வத்தக் குழம்பும் அனைவருக்குமே பேவரெட் என்கிறார்கள்.
அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்று தனது சமையல் திறமையை வெளிக்காட்டியுள்ளார் மனோபாலா அவர்கள்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
