டி.ராஜேந்தர் அவர்களின் தாடிக்கு பின்னால் இப்படியொரு வேதனையா?- யாருக்கும் தெரியாத தகவல்
டி.ராஜேந்தர்
கோலிவுட்டில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் கலக்கியவர் தான் டி.ராஜேந்தர்.
இன்று அவர் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பு என எல்லா ஜானரிலும் கலக்கினார்.
இவரது மகன் சிம்புவும் சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார், சினிமாவில் பல துறைகளில் இவரும் சாதித்துள்ளார்.
தெரியாத தகவல்
டி.ராஜேந்தர் என நாம் நினைக்கும் போதே முதலில் நியாபகத்தில் வருவது அவரது தாடி தான். இந்த தாடிக்கு பின்னால் ஒரு கதை ஒன்று உள்ளது.
அது என்னவென்றால், கல்லூரிக்கு சேரும்போது தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள முடிவெடுத்தாராம்.
ஆனால் அவரது உறவினர் ஒருவர், இவர் மூஞ்சிக்கெல்லாம் ஷேவிங் ஒரு கேடா, சும்மா இருந்தா காசும், பிளேடும் மிஞ்சும் என்று சொன்னாராம். இதனால் பாதிக்கப்பட்ட ராஜேந்தர் வாழ்க்கையில் வென்ற பிறகே தாடி எடுக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளார்.
பிறகு சினிமாவில் சாதித்த பிறகு, வெற்றிக்கண்ட போது தாடி இருந்ததே இப்போது ஏன் எடுக்க வேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டாராம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
