முதல் சம்பளம் 75 ரூபாய்.. இன்று சொத்து மதிப்பு 3000 கோடி ரூபாய்.. சல்மான் கான் வாழ்க்கை

By Karthick Raja Oct 04, 2026 10:02 AM GMT
Report

Unknown facts about Actor Salman khan: நடிகர் சல்மான் கான் இன்று இந்திய சினிமாவின் மிகமுக்கிய புள்ளியாக இருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில், இவர் வாங்கிய முதல் சம்பளம், பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட காரணம், சொத்து மதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன; அதைப்பற்றி பார்ப்போம் வாங்க.

பள்ளி வாழ்க்கை

அப்படி, நடிகர் சல்மான் கானின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், சிறுவயதில் சரியான நேரத்தில் பள்ளி கட்டணம் செலுத்த முடியாததாலக் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டதோடு, ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்தே வெளியேற்றப்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

முதல் சம்பளம் 75 ரூபாய்.. இன்று சொத்து மதிப்பு 3000 கோடி ரூபாய்.. சல்மான் கான் வாழ்க்கை | Unknown Facts About Actor Salman Khan

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்

முதல் சம்பளம்

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு, தனது 14-வது வயதில் மும்பையில் உள்ள தாக் ஜோடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடன கலைஞராக நடனமாடியுள்ளார் சல்மான் கான். அதற்காக அவருக்கு ரூ. 75 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவே அவருடைய முதல் சம்பளம் ஆகும். இதன்பின், உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

முதல் சம்பளம் 75 ரூபாய்.. இன்று சொத்து மதிப்பு 3000 கோடி ரூபாய்.. சல்மான் கான் வாழ்க்கை | Unknown Facts About Actor Salman Khan

நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

சொத்து

அன்று தனது முதல் சம்பளமாக ரூ. 75 வாங்கிய சல்மான் கானின் இன்றைய சொத்து மதிப்பு ரூ. 3000 கோடி. மேலும், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 150 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ. 250 கோடி சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் சம்பளம் 75 ரூபாய்.. இன்று சொத்து மதிப்பு 3000 கோடி ரூபாய்.. சல்மான் கான் வாழ்க்கை | Unknown Facts About Actor Salman Khan

பணம் கிடைக்காமல் அவதிப்படும் அஜித், டேர்டெவில் நிலைமை

பணம் கிடைக்காமல் அவதிப்படும் அஜித், டேர்டெவில் நிலைமை

சினிமா என்ட்ரி

1988-ஆம் ஆண்டு வெளியான 'பிவி ஹோ தோ ஐசி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சல்மான் கான், 'மைனே பியார் கியா' படத்தின் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகராக உயர்ந்தார். இதன்பின் பல வெற்றி படங்களை தந்து பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். இன்று வரை திரையுலகின் டாப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சம்பளம் 75 ரூபாய்.. இன்று சொத்து மதிப்பு 3000 கோடி ரூபாய்.. சல்மான் கான் வாழ்க்கை | Unknown Facts About Actor Salman Khan

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US