ரூ. 500 சம்பளம் பெற்று பிரபு தேவா நடித்த படம் எது தெரியுமா?
நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமா ஒருகாலத்தில் பெரிய அளவில் கொண்டாடிய நடிகர்.
ஒவ்வொரு நடிகர்களின் படங்களிலும் சில விஷயங்களை ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் பிரபு தேவாவின் படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது அவரது நடனம் தான்.
மிகவும் கடினமான ஸ்டெப்பை தான் போடுவார், ஆனால் அவர் ஆடும்போது பார்க்கும் போது மிகவும் சாதாரணமாக தெரியும்.
இடையில் படங்கள் நடிக்காமல் இருந்த அவர் இப்போது மீண்டும் படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில் தான் பிரபுதேவா ரூ. 500 சம்பளம் பெற்று நடித்த படம் குறித்து சில தகவல் வந்துள்ளது. மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் பனி விழும் இரவு என்ற ஒரு பாடல் வரும்.
அந்த பாடலில் சில காட்சியில் பிரபுதேவா தோன்றியிருப்பார், அதில் நடித்ததற்காக மணிரத்னம், பிரபுதேவாவிற்கு ரூ. 500 சம்பளம் கொடுத்துள்ளாராம்.