பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனுக்கு தேங்காய் அடைமொழியாக வந்தது எப்படி?..
தேங்காய் சீனிவாசன்
தமிழ் சினிமாவில் 1965ம் ஆண்டு வெளியான ஒரு விரல் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் தேங்காய் சீனிவாசன்.
எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இவர் அவர் நடித்த அத்தனை படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அனைத்து படங்களிலும் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசும் ஒரு நபராக நடித்து வந்த தேங்காய் சீனிவாசன், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதேபோல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த் தில்லு முள்ளு படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காரணம்
தேங்காய் சீனிவாசனுக்கு எப்படி தேங்காய் என்ற அடைமொழி வந்தது என்ற விவரம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. கல் மணம் என்ற நாடகம், சீனிவாசனின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.
இதில் தேங்காய் வியாபாரியாக நடிப்பில் பொளந்து கட்டிய சீனிவாசனை நடிப்பை பாராட்டிய நடிகர் தங்கவேலு இனி இவர் தேங்காய் சீனிவாசன் என வாழ்த்தினார்.