விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் இதுதானா?- ஆனால்?
விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் ஹிட் படமாக அமைந்துவிட்டது துப்பாக்கி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தயாரான இப்படம் இங்கு செம ஹிட்டடித்த வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் படம் ரிலீஸ் ஆகி 9 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் வழக்கம் போல் டிரெண்டிங் டாக் கிரியேட் செய்து படத்தை பற்றி பேசி வந்தார்கள், அந்த டாக் கூட டுவிட்டர் டிரண்டிங்கில் வந்தது.
ஒரு படம் தயாராகி வெளியாவதற்குள் நிறைய மாற்றங்கள் நடக்கும், அப்படி துப்பாக்கி படத்திலும் நிறைய விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கிறது.
அதில் ஒன்று தான் படத்தின் பெயர், முதலில் படத்திற்கு மாலை நேரத்து மழைதுளி என்று தான் பெயர் வைத்துள்ளனர், பின் சில காரணங்களால் துப்பாக்கி என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் படத்திற்கு துப்பாக்கி என்று வைத்தது தான் சரி, கெத்தாக இருந்தது என கமெண்ட் செய்து வருகின்றனர்.