யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் வருவதற்கு முன் பட விமர்சனங்களை விஜய் எப்படி தெரிந்துகொள்வார் தெரியுமா?
நடிகர் விஜய் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பிரபலம். தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மற்ற மாநிலங்களிலும் விஜய்யின் படத்திற்கான மவுசு கூடிக்கொண்டே போகிறது.
படங்கள் தமிழ்நாட்டு அளவில் மற்ற இடங்களிலும் வசூலிக்கிறது. அடுத்து அவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வரவுள்ளது, இந்த முறை இப்படத்திற்கான வியாபாரம் எல்லாம் பெரிய அளவில் நடக்கும் என்பது சினிமா துறையினரின் கணக்கு.
மாஸ்டர் கொஞ்சம் கொரோனா பிரச்சனையால் அப்படியே வந்த வேகத்தில் போய்விட்டது, ஆனால் பீஸ்ட்டை ரசிகர்கள் வேறலெவலில் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
இப்போது யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் என ஒரு படம் குறித்து தெரிந்துகொள்ள எத்தனையோ சமூக வலைதளங்கள் வந்துவிட்டது, ஆனால் இவற்றிற்கு முன்பு எப்படி பிரபலங்கள் ஒரு படத்தின் விமர்சனத்தை தெரிந்துகொள்வார்கள் என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கும்.
இந்த கேள்விக்கு விஜய் மாஸ்டர் பட பிரபலத்திடம் கூறியுள்ளார். சமூக வலைதளங்கள் வருவதற்கு முன்பு நீங்கள் எப்படி ஒரு படத்தின் விமர்சனத்தை தெரிந்துகொள்வீர்கள் என நடிகர் லல்லு விஜய்யிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், என் பட ரிலீசின் போது நண்பர்களை போய் பார்க்க சொல்வேன், அவர் அங்கு சென்று எனக்கு போன் செய்வார்கள். அப்போது ஹெட் போன் போட்டுக்கொண்டு அவர்கள் எந்தெந்த சீனை ரசிக்கிறார்கள், கை தட்டுகிறார்கள் என்பதை கேட்பேன். படத்தை ஒருமாதிரி கூறினார்கள் என்றால் போனை ஆப் செய்துவிட்டு படுத்துவிடுவேன் என்று தளபதி கூறியதாக லல்லு தெரிவித்துள்ளார்.