அதை கூட விட்டு வைக்கலையா? அதுல்யா வீட்டில் நடந்த திருட்டு.. விசாரணையில் வெளிவந்த பகிர் தகவல்கள்

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
அதுல்யா ரவி
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அதுல்யா ரவி. கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கடாவார், வட்டம், எண்ணித்துணிக போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திருட்டு
அதுல்யா ரவி தனது சொந்த ஊரான கோவையில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் ரூ.2 ஆயிரம் பணம் பாஸ்போர்ட் திருடு போய்விட்டது.
இதனால் வடவள்ளி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். விசாரணையில் வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் சேர்ந்த செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் பாஸ்போர்ட் எங்கு வைத்துள்ளார்கள் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.