மலையாள சினிமா வரலாற்றில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த Marco... முக்கிய சாதனை
மார்கோ படம்
சினிமாவை ரசிக்கும் ரசிகர்கள் இப்போதெல்லாம் எல்லா மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலும் கொரோனா காலத்தில் இருந்து மற்ற மொழி படங்களுக்கும் நல்ல ரீச் கிடைத்துள்ளது. அப்படி மலையாளத்தில் தொடங்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படம் மார்கோ.
ஹனிஃப் அடினி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள இப்படத்தை ஷெரீப் முகமது தயாரித்துள்ளார், படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
சுமார் ரூ. 30 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 100 கோடி வரை வசூலித்திருப்பதாக நடிகர் உன்னி முகுந்தன் தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
A சர்டிபிகேட் வாங்கிய ஒரு படம் ரூ. 100 கோடி வசூலித்திருப்பது மலையாள சினிமாவில் இதுவே முதன்முறையாம்.
Marco - First Time in the History of Malayalam Cinema - An 🅰️ Rated Movie Grosses 100+ Cr!#Marco #running #successfully #blockbuster #incinemasnow pic.twitter.com/PEfzLdJv5r
— Unni Mukundan (@Iamunnimukundan) January 16, 2025