சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மகளுக்காக செய்த அழகிய விஷயம்- வீடியோவுடன் இதோ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி வருபவர்களில் ஒருவர் உன்னி கிருஷ்ணன்.
கர்நாடிக் இசைக் கலைஞரான இவர் அதிகம் சாமி பாடல்கள், மேடை கச்சேரி என நிறைய செய்துள்ளார், தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
தற்போது இவரை மக்கள் நினைவுகூர்வது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான். இதுவரை 7 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். உன்னி கிருஷ்ணனின் மகள் உதாராவை நாம் அனைவருக்குமே நன்றாக தெரியும்.
காரணம் அவர் சைவம் படத்தில் பாடிய அழகு என்ற பாடல் பெரிய ரீச், தேசிய விருது எல்லாம் அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு பிசாசு, தெறி, லட்சுமி போன்ற படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார், அதுவும் ஹிட் லிஸ்டில் தான் உள்ளது.
பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மகளுக்கு முடி பின்னி விடும் வேலையை முதன்முறையாக செய்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் கியூட் வீடியோவுக்கு அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.