ரசிகர்களை அதிகம் கவர்ந்த பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் பாடல்கள் - ஒரு சிறப்பு பார்வை

By Kathick May 23, 2022 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தனது குரலினால் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டவர் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன். இவர் பாடிய ஒவ்வொரு பாடலும் தற்போது வரை பலருடைய மனதில் காதலை வரவைத்துள்ளது. அந்த அளவிற்கு பல காதல் பாடல்களை தமிழ் சினிமாவில் பாடிய பிரபலமான பாடகர்களில் ஒருவர் உன்னி கிருஷ்ணன். அப்படி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் பாடல்கள் குறித்து பார்க்கவிருப்பது தான் இந்த கட்டுரை. 

என்னவளே அடி என்னவளே

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் இடம்பெற்ற பாடல் என்னவளே அடி என்னளவே. இந்த பாடலை பாடி தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார் உன்னி கிருஷ்ணன். காதலர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடலுக்காக உன்னி கிருஷ்ணனுக்கு தேசியா விருது கிடைத்தது. தான், பாடிய முதல் பாடலிலேயே தேசிய விருதை வென்றவர் உன்னி கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. 90ஸ் காலக்கட்டத்தில் காதலர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட பாடல் என்றால் அது என்னவளே அடி என்னவளே தான்.


காற்றே என வாசல் வந்தாய்

வசந்த் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ரிதம். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் காற்றே என் வாசல் வந்தாய் எனும் பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடலை உன்னி கிருஷ்ணன் மிகவும் பொருத்தமாக பாடியிருந்தார். காதல் ஜோடிகளை கவரும் வண்ணம் அமைத்திருந்த இப்பாடல் 90ஸ் காலகட்டத்தில் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.  

தென்மேற்கு பருவக்காற்று

பாரதிராஜா இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கருத்தம்மா. இப்படத்தில் தென்மேற்கு பருவக்காற்று எனும் பாடல் ஏ.ஆர். ரஹ்மானின் அழகிய இசையில் உருவானது. இப்பாடலை பாடி, அப்பாடலுக்கு மேலும் அழகை கூடியவர் உன்னி கிருஷ்ணன் மற்றும் கே.எஸ். சித்ரா. இப்பாடல் உன்னி கிருஷ்ணன் அவர்களின் மாஸ்டர் பீஸ் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மிகவும் கடினமான பாடல்களில் ஒன்று தென்மேற்கு பருவக்காற்று. 90ஸ் காலகட்டத்தில் துவங்கி இன்று வரை அனைவராலும் கேட்கப்பட்டும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.


ஆனந்தம் ஆனந்தம் பாடும்

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பூவே உனக்காக காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் அனைவரின் மனதை கலங்க வைத்த பாடல்களில் ஒன்று ஆனந்தம் ஆனந்தம் பாடும். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைப்பில் உன்னி கிருஷ்ணன் பாடியிருந்த இப்பாடல் இன்றும் அனைவரின் Favorite தான். பூவே உனக்காக படம் வெளிவந்த நேரத்தில் இப்பாடல் ஒலிக்காத திருமண மண்டபமே இல்லை என்று தான் சொல்லவே வேண்டும். அந்த அளவிற்கு பிரபலமான உன்னி கிருஷ்ணன் பாடலில் இடம்பிடித்துள்ளது இப்பாடல்.


ரோஜா ரோஜா

90ஸ் காலகட்டத்தில் இருந்து இன்று வரை அனைவரின் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ள ஒரே பாடல் ரோஜா ரோஜா. காதலர் தினம் படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். உன்னி கிருஷ்ணனின் அழகிய குரலில் இருந்து வெளிவந்த இப்பாடல் மாபெரும் வரவேற்பை இளைஞர்கள் மத்தியில் பெற்றது. குறிப்பாக காதல் ஜோடிகளின் காலர் ட்யூனாக இன்றும் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களில் இது ஒன்றாக இருக்கிறது.

  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US