ரஜினியுடன் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் என்று தெரிகிறதா?... இந்த நடிகர் தானா?
ரஜினி
நடிகர் ரஜினி, இந்திய சினிமா கொண்டாடி வரும் பிரபலம். திருவிழா இல்லை என்றாலும் இவரது படங்கள் ரிலீஸ் என்றாலே திருவிழா கோலமாக மாறிவிடும்.
அப்படி தான் இந்த சுதந்திர தினம் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழாவாக மாறியது. காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ தயாரிக்க ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் நாளுக்கு நாள் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
போட்டோ
கூலி படம் பற்றியும், படத்தில் நடித்தவர்கள் பற்றியும் நிறைய விஷயங்கள் ரசிகர்கள் பேசிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதில் ஒரு நடிகர் ரஜினியுடன் உள்ளார், இது படத்தில் இடம்பெற்ற காட்சியாக தெரிகிறது. அந்த புகைப்படத்தில் ரஜினியுடன் இருப்பது பிரபல நடிகர், இயக்குனருமான பார்த்திபன் தான்.