கடும் நோயால் ஏற்பட்ட பாதிப்பு, தெருவில் விட்ட குடும்பம்- நடிகை பானுப்ரியா வாழ்க்கையில் ஏற்பட்ட சோக கதை
பானுப்ரியா
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா.
கருப்பு நிறம், முட்டக் கண்ணு, வசீகர முகம், இயல்பான நடிப்பு, அபார நடனம் என தனித்துவ குணங்களை கொண்டு ரசிகர்களை கொள்ளை கொண்டார்.
தமிழில் இவரது முதல் திரைப்படம் என்றால் 1983ம் ஆஒடு வெளியான மெல்ல பேசுங்கள் படம் தான்.
இவர் பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால் பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் படங்களாகவே அமைந்தது.
பிஸியாக நடித்துக்கொண்டு வந்த இவர் 1998ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
நடிகைக்கு நோய்
பிஸியான படங்கள் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் நடிகை பானுப்ரியாவிற்கு நினைவாற்றல் சம்பந்தமான பிரச்சனை வந்திருக்கிறது. குறிப்பாக சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் போது இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஒரு விஷயத்தாலேயே சினிமாவில் இருந்து ஒதுங்கி விடலாம் என நினைத்து இருக்கிறார். அந்த நேரத்தில் அவரது கணவர் இறந்துபோன குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது, நடிக்கவும் வந்தார்.
சென்னையில் மிகப்பெரிய வீடு இருந்தது, சொந்த பிரச்சனை காரணமாக அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிறகு ஏ.வி.எம் சரவணன் தன்னுடைய ஸ்டூடியோவில் உள்ள ஒரு அறையை கொடுத்து தங்க வைத்திருக்கிறார்.