விஜய்யின் 69வது படம் எப்படிபட்ட கதை, படப்பிடிப்பு எப்போது?- கசிந்த தகவல்
விஜய் 68
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப்பில் உள்ள பிரபலம்.
இப்படி பீக்கில் இருக்கும் போது இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று யாரும் கூறியது இல்லை, ஆனால் விஜய் எடுத்த முடிவு கண்டு எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள்.
ஆனால் அவர் மக்களுக்கு தொண்டு செய்ய விரும்பி வருவதால் அரசியல் களத்தில் அவரை காண மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமான கோட் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி படு மாஸ் கலெக்ஷன் செய்து வருகிறது.
முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் படம் ரூ. 126.32 கோடி வரை வசூலித்திருந்தது.
அடுத்த படம்
கோட் படத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் விஜய்யின் 69வது படம் குறித்து பேச்சுகள் அதிகம் வலம் வருகிறது.
தற்போது என்னவென்றால் வினோத்-விஜய் இணையும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், படம் கமர்ஷியல் கதைக்களத்தை கொண்டதாக தெறி பட கதை போல் இருக்கும் என்ற தகவல் வலம் வருகிறது.
விஜய்யின் கடைசி படமான அவரது 69வது படத்தை எச்.வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறதே தவிர இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.