குக் வித் கோமாளி 3 சீசன் தொடங்கும் தேதி, போட்டியாளர்கள் இவர்களா?- கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்
விஜய் தொலைக்காட்சியின் TRPயை உயர்த்தி வருகிறது கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்.
இப்போது நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, எந்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகியுள்ளது என்பது நமக்கே தெரியும். 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக அபிஷேக் நுழைந்துள்ளார்.
இந்நிகழ்ச்சியை அடுத்து ரசிகர்கள் விஜய் டிவியில் எதிர்ப்பார்ப்பது குக் வித் கோமாளி, 3வது சீசன் எப்போது என்பது மக்களின் பெரிய கேள்வியாக உள்ளது.
குக் வித் கோமாளி 3வது சீசன் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்க இருப்பதாக அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டார்களாம்.
இந்த சீசனில் நமக்கு பரீட்சயப்படாத சில முகங்களும், பரீட்சயப்பட்ட பிரபலங்கள் இருப்பார்கள் என்கின்றனர், ஆனால் முழு விவரம் எதுவும் தெரியவில்லை.