சூர்யா-சிறுத்தை சிவா இணையும் படம் குறித்து வந்த சூப்பர் தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக இருக்கிறார் சூர்யா. எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், வாடிவாசல், சிறுத்தை சிவா படம் என அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடிக்கிறார் சூர்யா.
பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் சூர்யா அடுத்து வாடிவாசல் படப்பிடிப்பில் இணைவார் என்று பார்த்தால் வெற்றிமாறன் விடுதலை படப்பிடிப்பில் செம பிஸியாக இருக்கிறார்.
எனவே சூர்யா சிறுத்தை சிவா படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் ஓரளவிற்கு முடிந்துவிட்டதாம். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தனியார் ஸ்டூடியோவில் படத்திற்கான செட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.
சிவாவும், ரஜினியை வைத்து இயக்கிவரும் அண்ணாத்த படத்தை வேகமாக முடித்து வருகிறாராம்.