சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது?- வெளிவந்த தகவல்
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஆவலாக பார்க்க காத்திருக்கும் ஒரு படம் என்றால் அது வாடிவாசல் படம் தான்.
வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிந்துவிட்டது. 40 பேர் கொண்ட ஒரு காட்சி மட்டும் மீதம் உள்ளதாகவும் அது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் எடுத்துவிடுவோம் என வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
வரும் செப்டம்பர் மாதம் அப்பட படப்பிடிப்பு நடக்கும் என தயாரிப்பு குழு அறிவித்தனர்.
இந்த நிலையில் எல்லோரும் எதிர்ப்பார்க்கும் வாடிவாசல் படத்தின் ஃபஸ்ட் லுக் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் தானு டுவிட் செய்துள்ளார்.
வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30'க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். #VaadiVaasalTitleLookTomorrow @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/PCJj6fJaVA
— Kalaippuli S Thanu (@theVcreations) July 15, 2021
வெளிநாட்டில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார் News Lankasri