தளபதி 69 படம் குறித்து வெளியான அதிரடி அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்
தளபதி 69
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். பல கோடி ரசிகர்களை சம்பாதித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர்.
விஜய்யின் கடைசி படமான தளபதி 69 பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த போவதாக விஜய் அறிவித்திருந்த நிலையில், படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் தான் இந்த படத்தில் நடிக்க போகும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தது.
தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கும் இந்த படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதிரடி அப்டேட்
தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள பையனூரில் தொடங்கப்பட்டுள்ளது. இது தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அனிருத் இசையில் உருவாகியுள்ள " one last song" என்ற பாடலுக்கு 500 நடன கலைஞர்களுடன் இணைந்து நடிகர் விஜய் நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 'நான் ரெடி தான்' பாடலை எழுதிய அசல் கோளார் தான் இந்த பாடலையும் எழுதி உள்ளார், இந்த பாடல் படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
