விஜய்யின் வாரிசு பட படப்பிடிப்பு அண்மையில் இங்கு தான் நடந்ததா?- எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
நடிகர் விஜய் ஒரு படம் முடியும் முன் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி விடுவார். அப்படி பீஸ்ட் பட படப்பிடிப்பின் போதே அவர் கமிட்டாகிய படம் தான் வாரிசு திரைப்படம்.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தான் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை என நடந்து வருகிறது, அவ்வப்போது சில அப்டேட்டுகளும் நமக்கு கிடைத்து வருகின்றன. தற்போது சமீபத்தில் படக்குழு எங்கு படப்பிடிப்பு நடத்தினார்கள் என ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது வாரிசு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஒரு மகளிர் கல்லூரியில் நடைபெற்றுள்ளதாம். இந்த படப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யாவும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம், இரண்டு நாள் மட்டுமே அவருக்கான காட்சிகள் எடுக்க ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் முதன்முறையாக இணைகிறார் ராஷ்மிகா, அதோடு ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் என பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.