தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அவருடன் நடிக்கும் முக்கிய நடிகர்கள்! யாரெல்லாம் பாருங்க
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
மேலும் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. தனுஷின் திரைபயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் மாறியுள்ளது திருச்சிற்றம்பலம்.
இந்நிலையில் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
கேப்டன் மில்லர்
இதற்கிடையே தற்போது இப்படத்தில் மலையாள நடிகர் Sumesh Moor மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தித்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தின் பூஜை வரும் 21-ஆம் தேதி நடக்க உள்ளதாகவும், அப்போது இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து அறிவிக்கபடலாம் என தகவல் வந்துள்ளது.
பிரம்மாண்டமாக நடக்கவுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா