உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு விஜய்யின் வேண்டுகோள் ! புகைப்படத்துடன் இதோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே மிக பெரியளவில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது, இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு 129 பேர் தேர்தலில் வெற்றிகண்டனர்.
மேலும் கடந்த 25 ஆம் தேதி தளபதி விஜய் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்திருந்தார்.
அதுமட்டுமின்றி அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் தளபதி விஜய் அவர்களுக்கு கூறிய அறிவுரை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. "இது"பதவி"அல்ல"பொறுப்பு"என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்குமாறு" அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
