வைரத்தால் ஆன ஆடை அணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஊர்வசி... வைரலாகும் வீடியோ
ஊர்வசி ரத்தேலா
ஒரு பிரபலம் எந்த விஷயம் செய்தாலும் சமூக வலைதளங்களில் வைரலாகி விடும்.
அப்படி இப்போது ஒரு பிரபல பாலிவுட் நடிகை வைரத்தால் ஆன ஆடையை அணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷயம் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
யார் இவர்
2013ம் ஆண்டு Singh Saab The Great என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ஊர்வசி ரவுடெலா.
அதன்பின் கன்னடம், ஹிந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் நடித்துவந்தவர் கடந்த 2022ம் ஆண்டு The Legend படம் மூலம் தமிழில் நடித்தார்.
இந்த வருடம் ஊர்வசி நடித்த தெலுங்கு படமாக டாகு மஹாராஜ் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பியது. இதில் இடம்பெற்ற டபிடி டிபிடி பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது.
32 வயதை எட்டியுள்ள நடிகை ஊர்வசி தனது பிறந்தநாளை வைரத்தால் ஆன ஆடையை அணிந்து கொண்டாடியதாக கூறப்படுகிறது. நீளமான கவுன் ஒன்றில் வைரங்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பட்டதாக அந்த ஆடை உள்ளது.