விபத்தில் சிக்கிய லெஜெண்ட் பட நடிகை.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
ஊர்வசி ரவுத்தலா
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஊர்வசி. இவர் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் .
கடந்த 2022 -ம் ஆண்டு சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்து
தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் ஊர்வசி ரவுத்தலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாபிதியோல் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சியை ஐதராபாத்தில் படமாக்கிய போது, ஊர்வசி ரவுத்தலா விபத்தில் சிக்கினார். அவருக்கு பலத்த காயமும், எலும்பு முறிவு ஏற்பட்டது.

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu