என்னால முடியாது - எஸ்.ஜே.சூர்யாவால் ஷூட்டிங்கிலிருந்து ஓட்டம் பிடித்த நடிகை
எஸ்.ஜே.சூர்யா
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் தான் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். சினிமாவில் முதலில் துணை இயக்குனராக அறிமுகமாகி பின் இயக்குனராக அவதாரம் எடுத்து அதில் அந்தஸ்தையும் பிடித்தார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிப்பின் மேல் இருந்த ஆர்வத்தால் "நியூ" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை இயக்கி நடித்திருந்தார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த "இறைவி" திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் அட்டகாசமான சென்சேஷனல் நடிகர் ஆனார்.
இவர் தற்போது ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்துள்ளார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னால முடியாது
இந்நிலையில் நடிகை ஊர்வசி பேட்டி ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா பற்றி பேசியுள்ளார். அதில், 'எஸ்.ஜே.சூர்யா எனது தீவிர ரசிகர். என்னை அவர் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் உங்கள் படத்தில் டபுள் மீனிங்காக இருக்கும் என மறுத்து விட்டேன்'.

'ஒரு கட்டத்தில் மாமி கேரக்டர் ஒன்றுக்கு (நியூ படத்தில் கிரண்) என்னை டப்பிங் பேச சம்மதிக்க வைத்து விட்டார். நான் ஸ்டுடியோ சென்று பார்த்தால் டயலாக் எல்லாம் டபுள் மீனிங்கில் இருந்தது. நான் உடனே என்னால் முடியாது என அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்' என தெரிவித்துள்ளார்.
மீண்டும் வில்லி அவதாரம் எடுக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri