மம்முட்டி, மோகன்லாலுக்கு பிறகு சிறந்த நடிகர் இவர் தான்.. வெளிப்படையாக கூறிய நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஊர்வசி. இவர் முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.
தற்போது, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் உள்ளொழுக்கு என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லாலுக்கு பிறகு இவர் தான் சிறந்த நடிகர் என்று பிரபல நடிகரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
ஊர்வசி கருத்து
ஊர்வசி கூறுகையில், ”மலையாள சினிமாவில் தனது உழைப்பாலும், நடிப்பு திறமையாலும் முன்னணி நடிகராக உச்சத்தில் ஜொலித்து கொண்டு இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால், இவர்களுக்கு பிறகு சிறந்த நடிகராக பகத் பாசிலை கூறலாம்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்ப சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார். விரைவில் அவர் இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு சிறந்த நடிகராக மாறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று ஊர்வசி கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
