அஜித்தின் வலிமை பட டிரைலர் குறித்து சூப்பர் கமெண்ட் போட்ட வெளிநாட்டு ரசிகர்- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
அஜித்தின் வலிமை படம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்க்கும் பெரிய நடிகரின் படம். படத்தின் ஆரம்பமே சரியில்லை என்பது போல் தெரிகிறது.
படப்பிடிப்பு நடத்த ஆரம்பிக்க கொரோனா வந்து பிரச்சனை கிளப்பியது, நீண்ட இடைவேளைக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க ஏற்கெனவே நடித்த சிலர் மீண்டும் நடிக்க வர முடியாது என்று கூறிவிட்டனர்.
கொரோனா அச்சத்தில் இருப்பவர்களை மீண்டும் அழைக்க முடியாது என வேறு நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். இப்போது படப்பிடிப்பு முடிந்து ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என படக்குழு பல புரொமோஷன் வேலைகள் செய்து வந்தனர்.
ஆனால் கொரோனா 3வது அலை என கூறப்பட்டு வரும் நிலையில் வருமா வராதா என்ற பேச்சுக்கள் எழும்பி வருகிறது.
படம் ரிலீஸ் ஆன அன்று தான் உறுதியாக கூற முடியும் என்ற முடிவுக்கு ரசிகர்களே வந்துவிட்டனர். இந்த நிலையில் அஜித்தின் வலிமை டிரைலர் பார்த்த ஒரு வெளிநாட்டு ரசிகர் படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்ப அஜித் ரசிகர்கள் அவரது டுவிட்டிற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.