நடிகர் சிம்புவின் தாயாரை பாராட்டும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்
டி.ராஜேந்தரின் மனைவியும், சிலம்பரசனின் தாயுமான உஷா ராஜேந்தர். இவருக்கு சொந்தமான டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது.
கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அப்போது ஒரு உடும்பு பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள் உஷா ராஜேந்தரிடம் உடனே தெரிவித்தனர்.
விரைந்து வந்த அவர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டார். இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதாக கூறினார்.
மேலும், வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனே விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது சிம்புவின் தாயார், உஷா ராஜேந்தரை பாராட்டி வருகின்றனர்.

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri