6 நாட்களில் வா வாத்தியார் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
வா வாத்தியார்
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் வா வாத்தியார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து முதல் முறையாக க்ரித்தி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
வசூல்
இந்த நிலையில், 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் வா வாத்தியார் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது.

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து IBC Tamilnadu
இழுபறியாக உள்ள தொகுதி பங்கீடு; தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி - தவெக உடன் பேச்சுவார்த்தையா? IBC Tamilnadu