4 நாட்களில் வா வாத்தியார் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
வா வாத்தியார்
கார்த்தி நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் வா வாத்தியார். தமிழ் சினிமாவிற்கு டார்க் காமெடி என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்திய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் இப்படம் உருவானது.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த்ராஜ், ஷில்பா மஞ்சுநாத் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இப்படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன்பின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்தனர். இப்படத்திற்கு ஒரு பக்கம் நல்ல விமர்சனங்களும், மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் கிடைத்தன.
வசூல் விவரம்
இந்த நிலையில், வா வாத்தியார் படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.
