வா வாத்தியார் படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வா வாத்தியார்
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் வா வாத்தியார்.
இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், க்ரித்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாதன் என பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால், ஜனநாயகன் படம் வெளிவராத இந்த சமயத்தில் வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.
வசூல்
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், முதல் நாள் வா வாத்தியார் படம் உலகளவில் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.